கோட்டா கோ கம போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள்! மெழுகுவர்த்தி ஏற்றிப் போராட்டம்
கோட்டா கோ கம அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.
அறவழிப் போராட்டத்தின் ஐம்பதாம் நாளான இம்மாதம் 28ம் திகதி சனிக்கிழமை, காலை பத்துமணிக்கு சுதந்திர சதுக்கத்தில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
அதற்கு இணையாக கோட்டா கோ கமவிலும் பண்டாரநாயக்க சிலை அருகே மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடைபெறும் நாட்டுக்காக மெழுகுவர்த்தி ஏந்துவோம் என்ற தலைப்பிலான இந்தப் போராட்டத்தில் கோட்டா கோ கமவுக்கு ஆதவரளிக்கும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தருகின்றவர்கள் தேசியக் கொடி மற்றும் 21ம் திருத்தச் சட்டம் தொடர்பான பதாகைகளுடன் வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.
பொருளாதார அரசியல் நெருக்கடி
இலங்கையில் அரசியல் பொருளாதார நெருக்கடியினால் நாட்டில் பெரும் போராட்டங்கள் வெடித்திருந்தன. இதனையடுத்து கொழும்பில் ஒன்று திரண்ட இளைஞர்கள், கோட்டாபய கோ கம கிராமத்தை அமைத்து போராட்டத்தை விரிவுபடுத்தியிருந்தனர்.
அதுமாத்திரமன்றி, அரசாங்கம் பதவி விலகும் வரை அங்கிருந்து நகரப் போவதில்லை என்றும் குற்பிட்டிருந்தனர். இந்த நிலையில், நாட்டில் பிரதமர் பதவி விலகியிருந்தததுடன், அமைச்சர்களும் தமது பதவியை இராஜினாமா செய்திருந்தனர்.
வெடித்த வன்முறை
அதைத் தொடர்ந்து வெடித்த கலவரங்களால் நாடு பெரும் நெருக்கடியை சந்தித்திருந்தது. எனினும, போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் எவையும் தற்போது வரை தீர்க்கப்படாத நிலையில், மீண்டுமொரு போராட்டம் பெரியளவில் வெடிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அமைதி வழியிலான போராட்டத்தை அரசாங்கமே வன்முறையாக மாற்றியதாக எதிர் கட்சிகள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/2be6f37d-925d-41dd-849b-5bd501d4f14c/22-628f36f38c098.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)