முடிவில்லா போராட்டமும் விடை கொடுக்கா அரசாங்கமும்!!
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளையுடன் ஒரு மாதம் பூர்த்தியாகின்றது.
காலி முகத்திடலில் உள்ள அரச தலைவர் அலுவலகத்திற்கு அருகில் இன்று 30ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
சுமார் ஒரு மாதமாக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தில் இதுவரையில் முறுகல் நிலை எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.
இதேவேளை, இதுவரை அரச தரப்பில் இருந்து போராட்டத்துக்கான பதில் எதுவும் கிடைக்கலவில்லை.
இளைஞர் யுவதிகள், கலைஞர்கள், தொழிற்சங்கத்தினர், விசேட தேவையுடையவர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் மதகுருமார்கள் என பலர் இந்த போராட்டத்துக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இன, மத பேதகங்கள் இன்றி கடந்த சித்திரைப் புத்தாண்டு மற்றும் ரமழான் போன்ற பண்டிகைகள் போராட்டம் இடம்பெறும் பகுதியில் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

