போராட்டக்களத்தில் புத்தாண்டு விளையாட்டுக்கள் - ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது காலி முகத்திடலில் போராட்டம் (காணொளி)
நாடு முழுவதும் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களும் சித்திரை புத்தாண்டு விளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளனர்
கொழும்பு - காலி முகத்திடலில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மழை வெயில் பாராது இளைஞசர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு "கோட்டாகோகம" என பெயர்சூட்டி இன்றுடன் ஐந்தாவது நாளாக போராடி வருகின்றனர்.
அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நேற்று இரவு புத்தாண்டு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் மாத்திரமல்லாமல் சர்வதேசம் முழுவதும் இலங்கை அரச தலைவருக்கு எதிராகப் பொதுமக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
வரலாறு காணாத இந்த மக்களின் எழுச்சி இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது என குறிப்பிடப்படுகிறது.
