காலிமுகத்திடல் தாக்குதல் - மகிந்தவிற்கு இறுகும் நெருக்கடி
காலிமுகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி 200க்கும் அதிகமானோர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி, அலரிமாளிகை இணைப்பாளர் மற்றும் கொள்ளுப்பிட்டி காவல்துறை பொறுப்பதிகாரி ஆகியோரிடம் நேற்று (11) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, குறித்த மூன்று அதிகாரிகளும் நேற்றுக் காலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நேற்று மாலை வரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் தலைமையில் ஆறு விசேட காவல்துறை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் அரச அதிகாரிகள் குழுவொன்று எதிர்காலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், வீடியோ காட்சிகள் ஊடாக தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
