ஆளும் அநுர அரசுக்கு தொடர் பின்னடைவு : பலூன்களை வெடிக்க வைத்து தோற்கடிக்கப்பட்ட பட்ஜெட்
Galle
NPP Government
Budget 2026
By Sumithiran
தேசிய மக்கள் சக்தி கட்சியால் நிர்வகிக்கப்படும் காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று (15) இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
மேயர் சுனில் கமகே வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார்.
வெடிக்க வைக்கப்பட்ட பலூன்கள்
முதலில் பேசிய ஜிலித் நிஷாந்த (ஐ.தே.க.), இந்த வரவு செலவுத் திட்டம் கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலிருந்து பெரிய அளவில் வேறுபட்டதல்ல என்று கூறினார். இந்த வரவு செலவுத் திட்டம் காற்று நிரப்பப்பட்ட பலூன் போன்றது என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் பொதுஜன ஐக்கிய பெரமுன உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பட்ஜெட்டை எதிர்த்து சிவப்பு பலூன்களை வெடிக்க வைத்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 4 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்