காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு
Galle
Death
Prison
By Pavi
காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஹபராதுவ, மெலேகொட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைதி உயிரிழப்பு
உயிரிழந்த கைதி ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த சந்தேகநபர் தொடர்பான நீதவான் விசாரணையும், பிரேதப் பரிசோதனையும் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி