படைத்தளபதிகள் மீதான தடை: பொங்கியெழும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்
போர் வீரர்களை போர்க் குற்றவாளிகளாகக் கண்டறிய ஐக்கிய இராச்சியம் நடத்திய விசாரணை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில(udaya gammanpila) கேள்வியெழுப்பியுள்ளார்.
இதன்படி சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட,ஜகத் ஜெயசூர்யா மற்றும் பிறருக்கு தடை விதித்த பிரிட்டனிடம் நாங்கள் மூன்று கேள்விகளைக் கேட்கிறோம்.
போர் வீரர்களுக்கு தற்காத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டதா..!
குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பு, நமது போர் வீரர்களுக்கு தங்களைத் தற்காத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டதா..!
உலகம் இதுவரை கண்டிராத மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தலைவர்களுக்கு இங்கிலாந்து ஒரு புகலிடமாக மாறியபோது, பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போர்வீரர்கள் எவ்வாறு குற்றவாளிகளாக மாறினர் என்பதை இங்கிலாந்து உலகிற்கு விளக்க வேண்டும்.என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாத லட்சியங்களை ஊக்குவிக்கிறது
இதேவேளை போர் வீரர்களுக்கு பிரிட்டன் விதித்த தடை, மனித உரிமைகளை அல்ல, பயங்கரவாத லட்சியங்களை ஊக்குவிக்கிறது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச (wimal weerawansa)தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நமக்கு ராஜதந்திர உறவுகள் இருந்தால், அவற்றை இப்போதே பயன்படுத்த வேண்டும். அத்தகைய வாய்ப்பிற்காகப் பயன்படுத்தப்படாத இராஜதந்திர உறவுகள், போருக்குப் பயன்படுத்தப்படாத வாளுக்கு மாற்றாகுமா என்பதுதான் கேள்வி என குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
