அநுர அரசாங்கத்தை நன்றி கெட்டவர்கள் என சாடும் உதய கம்மன்பில
தனக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டுகளும் இல்லை என்பதே அரசாங்கத்திற்கு தற்போது உள்ள பிரச்சினை என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில் என் மீதும் அரசாங்கம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க தங்காலையில் கார்ல்டன் இல்லத்திற்கு சென்று, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
என்னுடைய வாயை மூட வேண்டும்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ நன்றி கெட்ட தற்போதைய அரசாங்கத்திற்கு, நன்றியுள்ள மனிதர்கள் இன்னுமும் நாட்டில் உள்ளார்கள் என்பதை காண்பிப்பதற்காகவே நான் இன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்திக்க வந்தேன்.
தற்போதைய அரசாங்கத்திற்கு என்னுடைய வாயை மூட வேண்டும் எனினும், எனக்கு எதிராக அவர்களிடம் எந்தவொரு குற்றச்சாட்டுகளும் இல்லை. அதனால் அவர்களால் என்னை கைது செய்ய முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
