இந்தியாவுக்கு விமான சக்கரத்தில் அமர்ந்து வந்த சிறுவன்...! அதிர்ச்சியில் நோக்கும் உலகம்
சிறுவன் ஒருவன் ஆப்கானிஸ்தானில் இருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து டெல்லிக்கு வந்த விடயம் சர்வதேச ரீதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் இவ்வாறு டெல்லிக்கு பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து புறப்பட்ட கே.ஏ.எம். விமானம் இரண்டு நேர பயணத்துக்குப் பிறகு புது டெல்லி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
யாருக்கும் தெரியாமல் அமர்ந்து
அந்த விமானத்துக்கு அருகே சிறுவன் ஒருவன் சுற்றித் திரிந்து வருவதைக் கண்ட பாதுகாப்புப் படையினர் அவரைக் கைது செய்து விசாரித்தனர்.
காபூல் விமான நிலையத்துக்குள் நுழைந்து ஆர்வ மிகுதியால் விமானத்தின் நடுப்பகுதி சக்கரம் உள்ள இடத்தில் அமர்ந்து ஒளிந்து கொண்டதாக அந்தச் சிறுவன் தெரிவித்தார்.
94 நிமிடங்கள் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட அந்தச் சிறுவன் உடல்நலத்துடன் டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கி உள்ளான்.
இந்திய பாதுகாப்பு வட்டார தகவல்கள்
சிறுவன் அமர்ந்து வந்த பகுதியில் சோதனை நடத்தியபோது சிறு ஒலிபெருக்கி இருந்தது தெரிய வந்தது.
அந்த விமானத்தில் நடத்தப்பட்ட முழு சோதனையில் எந்தவித சதிச் செயலும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அதே விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு அந்தச் சிறுவன் திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவித்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
