தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
Sri Lanka Police
Gampaha
Sri Lankan Peoples
By Dilakshan
கம்பஹா கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச்சூடானது, அடையாளந்தெரியாத நபர் ஒருவரால் இன்று மாலை 4 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
அதன்படி, சம்பவம் தொடர்பில் கம்பஹா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர்.
அதேவேளை, மொரகஹஹேன பகுதியில் நேற்றைதினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்