கண்டியில் பாரிய மண்சரிவு: பிரதான வீதி இரண்டாகப் பிளவு.. போக்குவரத்து முற்றாகத் தடை
Kandy
Landslide
By Pavi
கண்டி, கம்பளை பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் பிரதான வீதியின் ஒரு பகுதி இரண்டாகப் பிளவடைந்துள்ளது.
கம்பளை - வெவதென்ன பகுதியில் இருந்து உடுதெனிய ஊடாக நாரங்கின்ன பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியின் ஒரு பகுதியே இவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை
குறித்த பகுதியில் உடபலாத்த பிரதேச சபையினால் அணையொன்று நிர்மாணிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் இன்று பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி