கணேமுல்ல சஞ்சீவ கொலை : சந்தேகநபர்களுக்கு தடுப்பு காவல்
கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியையும் அவரை புத்தளத்திற்கு அழைத்துச் சென்ற வேன் சாரதியையும் 90 நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொழும்பு (Colombo) - புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கடந்த 19ஆம் திகதி குற்றச்செயல்களில் ஈடுபடும் கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ சமரரத்ன படுகொலை செய்யப்பட்டார்.
துப்பாக்கிதாரி
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் ஒரு பெண் உட்பட மற்றுமொரு சந்தேகநபரையும் மஹரகம காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் தற்போது கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியையும் அவரை புத்தளத்திற்கு அழைத்துச் சென்ற வேன் சாரதியையும் 90 நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
