செவ்வந்தியை தாண்டி தேசபந்து தென்னகோன் மீது திரும்பியுள்ள பார்வை : பாரிய சிக்கலில் சி.ஐ.டியினர்
நாட்டில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்களையடுத்து தற்போதைய அரசின் மீதான நம்பகத்தன்மை என்பது ஒரு பாரிய கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளது.
இதற்கு ஆரம்ப புள்ளியாக அமைந்த கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeeva) படுகொலையில், மூளையாக செயற்பட்டவராக அடையாளம் காணப்பட்ட இஷார செவ்வந்தியினை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
இருப்பினும், இந்த கொலை சம்பவம் தொடர்பிலும் சரி, இஷாரா செவ்வந்தி குறித்தும் எவ்வித முறையான அறிவிப்புக்களும் காவல்துறையினர் தரப்பிலிருந்து வெளியாகவில்லை.
இந்தநிலையில், இது தொடர்பில் நடந்து முடிந்த நாடாளுமன்ற அமர்வில் பலதரப்பட்ட அரசியல் தலைமைகள் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன் காவல்துறையினர் மீதும் தற்போது வரை தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறான பிண்ணனியில் தற்போது இஷார செவ்வந்தியினை தேடி அலைந்த காவல்துறையினர், முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள W 15 உணவகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலே தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் அவர் உட்பட கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் எட்டு பேரைக் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், இவ்வாறு மாறி மாறி தேடுதல் நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்ளும் காவல்துறையினர் இந்த சம்பவங்கள் தொடர்பில் முறையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை ?, இஷார செவ்வந்தி கைது சிக்குவாரா ?, தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவரா ? மற்றும் இச்சம்பவங்கள் தொடர்பிலான பின்னணி என்பவற்றை ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 4 நாட்கள் முன்
