பாகிஸ்தான் வரை சென்ற கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: வெளியானது அதிர்ச்சிகர பின்னணி!!
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையை திட்டமிட்ட டுபாயில் (Dubai) தலைமறைவாகியிருக்கும் கெஹல்பத்தர பத்மேவுக்கு பாகிஸ்தானில் (Pakistan) உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொந்தளிப்பில் இருக்கும் சஞ்சீவவுக்கு விசுவாசமான பாதாள உலக நபர்கள், தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள பத்மேவின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் அடியாட்களை கொலை செய்ய தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் அங்கீகாரம்
இந்த நிலையில், சஞ்சீவ கொலையை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மத்தியில் கெஹல்பத்தர பத்மேவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் பாதாள உலக குற்றவாளிகளின் செயல்பாடுகளுக்காக பாதாள உலகத் தலைவர்களுக்கு பணம் செலுத்துவதன் அடிப்படையில் பாகிஸ்தானிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஐஸ் மற்றும் ஹெராயினை வழங்குவதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஆயுத விற்பனை
அத்தோடு, 100 கிலோ கிராம் போதைப்பொருள் வாங்கப்படும்போது, பாகிஸ்தான் கடத்தல்காரர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 ஆயுதங்களும் பெறப்படுவதை புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில், கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பாகிஸ்தானிய போதைப்பொருள் கடத்தல்காரர்களிடையே கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது கும்பலை மிகவும் பிரபலமாக்கியுள்ளதால், மற்ற போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பத்மேவின் கும்பல் உறுப்பினர்களைத் தாக்கி தங்கள் பதவியைப் பாதுகாக்க திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 22 மணி நேரம் முன்
