கணேமுல்ல சஞ்சீவ கொலை : துப்பாக்கிதாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாற உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன் ஜூன் மாதம் 4 ஆம் திகதி குறித்த சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகம்
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான சாரதியை, இந்த மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.
பூசா சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
