ஒன்றேகால் கோடிக்கு ஏலம்போன விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு
விநாயகர் சதுர்த்தி தினத்தில் படைக்கப்பட்ட லட்டு ஒன்று இந்திய மதிப்பில் ஒன்றே கால் கோடிக்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் புறநகர் பகுதியான பந்தலகுடாவில் உள்ள சன் சிட்டியில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டே இவ்வாறு ஏலம் போனது.
இரு மடங்காக உயர்ந்த விலை
கடந்த வருடம் இதே லட்டு ரூ.65 லட்சத்துக்கு ஏலம் போன நிலையில், இந்த முறை அதன் விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது.இதன்படி அந்த லட்டு ரூ.1 கோடியே 26 லட்சத்துக்கு ஏலம் போய் சாதனை படைத்தது.
#BreakingAllRecords, Ganesh laddu at Richmond Villas in Sun City, #BandlagudaJagir, was auctioned for staggering Rs.1.25 #crore here on Thursday. Last year, the #Laddu was sold for about Rs.65 lakh. #GaneshLadduAuction#GaneshVisarjan #GaneshFestival pic.twitter.com/wMWSSamav0
— Arbaaz The Great (@ArbaazTheGreat1) September 28, 2023
மற்றுமொரு லட்டு ஏலம்
அதேபோல் ஐதராபாத்தின் பாலப்பூர் நகரில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ரூ.27 லட்சத்துக்கு ஏலம் போனது. தங்க லட்டு என்று அழைக்கப்படும் 21 கிலோ எடையுள்ள பிரபலமான லட்டுவை தாசரி தயானந்த் ரெட்டி என்பவர் ஏலத்தில் எடுத்தார்.
Hyderabad's famous 21 kg #BalapurGaneshLaddu of #BalapurGanesh was auctioned for a record price of ₹27 lakh this year to Dasari Dayanand Reddy from Turkayamjol set a new record.#GaneshImmersion #BalapurLaddu #Hyderabad #Ganeshotsav2023 #GaneshVisarjan#GaneshUtsav #Telangana https://t.co/Dz1FfYfW3U pic.twitter.com/TNXgj6SXxU
— Surya Reddy (@jsuryareddy) September 28, 2023