அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை! புதுப்பிக்கப்பட்ட வெளிநாடொன்றுக்கான பயண ஆலோசனை
United States of America
Pakistan
World
By Dilakshan
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை மீளாய்வு செய்யுமாறு தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு குறைபாடு, குற்றச்செயல்கள், உள்நாட்டு கலவரம், தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் அதிக ஆபத்தைக் குறிக்கும் 'நிலை 3' ஆக அறிவிக்கப்பட்டள்ளது.
கொலை முயற்சிகள்
இதுவேளை, அந்நாட்டின் பாலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்தூன்க்வா பகுதிகளுக்கு பயணமே செய்ய வேண்டாம் என உயர் எச்சரிக்கையாக நிலை 4 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் கடத்தல், கொலை முயற்சிகள் அதிகம் என அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
தீவிரவாதம்
மேலும், அனுமதி இல்லா போராட்டங்களில் பங்கேற்பதும், அரசை விமர்சிக்கும் சமூக ஊடக பதிவுகளும் கைது ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தீவிரவாதம் அதிகரித்து வரும் நிலையில் இந்த பயண எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 11 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி