போதைப் பொருள் விற்பனை: பிரபல வர்த்தகர் கைது!
திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் பல நாட்களாக கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (25) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கைது செய்யப்பட்டவர் 45 வயதான நைசர் என்றழைக்கப்படும் முஹம்மது ஹாசீம் பிரதான சந்தேக நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது நடவடிக்கை
விசேட காவல்துறை அதிரடிப்படையினரும்,மொரவெவ காவல்துறையினரும் இணைந்து கந்தளாய் பிரதேசத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட மோப்ப நாய்களின் உதவியுடனும் குறித்த சந்தேக நபரை கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த 27 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் மொரவெவ காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |