சிறிலங்காவை வந்தடையவுள்ள கப்பல் தொடர்பில் முக்கிய தகவல் வெளியானது
Srilanka
Litro
Laugfs
Jayantha de Silva
Gas carrier
By MKkamshan
தற்போதுவரையில், நாட்டை வந்தடைந்துள்ள மூன்று எரிவாயு கப்பல்களிலும் கொண்டுவரப்பட்ட எரிவாயு, உரிய தரநிலைக்கு அமைய உள்ளமையால், அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய இரண்டு கப்பல்களும், லாப்ஃஸ் நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய ஒரு கப்பலும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளது. அத்துடன், ஜனவரி மாதம் 10ஆம் திகதியளவில், லாப்ஃஸ் நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய கப்பலொன்றும் நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத இறுதிவரையில் நாட்டுக்கு போதுமானளவு எரிவாயு உள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி