விநியோகம் தொடர்பில் லாஃப் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
LAUGFS Gas PLC
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Laugfs Gas Price
By Kanna
சந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போதைய நிலையில், 3 ஆயிரத்து 400 மெட்ரிக்தொன் எரிவாயு சிலிண்டர்களில் நிரப்பட்டு விநியோக நடவடிக்கைகளுக்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டங்களின் அடிப்படையில் உரிய விலை பட்டியலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொது மக்களிடம் வேண்டுகோள்
இதேவேளை, லாஃப் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக அதிக பணம் செலுத்துவதை தவிர்க்குமாறு லாஃப் எரிவாயு விநியோகஸ்தர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை பட்டியலையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
