நைரோபியில் எரிவாயு வெடித்து பாரிய விபத்து : இருவர் பலி 200இற்கு மேற்பட்டோர் காயம்
கென்யாவின் தலைநகர் நைரோபியில் இடம்பெற்ற எரிவாயு வெடி விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 220இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எம்பகாசி மாவட்டத்தில் நேற்று (01) எரிவாயு சிலிண்டர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த லொறி வெடித்து சிதறியதில் பாரிய தீப்பிளம்பு உருவானதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் என்பன சேதமடைந்துள்ளதையும் தொடர்மாடிக்கு அருகில் பாரிய தீப்பிளம்பையும் காண்பிக்கும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
காவல்துறையினர் சுற்றிவளைப்பு
மீட்பு நடவடிக்கைகளிற்காக குறிப்பிட்ட பகுதியை சுற்றிவளைத்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் அந்தப் பகுதியை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தீவிபத்து பல தொடர்மாடிகளிற்கு பரவியுள்ளதால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.
அத்துடன் வெடிப்பு சம்பவத்தின் பின்னர் அப்பகுதியில் அதிர்வுகளை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
எனக்கு முன்னால் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் அதன் தாக்கம் என்னை கீழே தள்ளிவீழ்த்தியது, என்மேல் தீ பரவியது, அதிஸ்டவசமாக நான் உயிர் தப்பினேன் என பொனிபேஸ் சிபுனா என்பவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாரிய வெடி விபத்துக்கள், பாரிய தீப்பிளம்புகள் ஏற்பட்டதால் மேலும் வெடிப்புகள் இடம்பெறலாம் என்ற அச்சத்தினால் மக்கள் அங்கும் இங்கும் ஓடியதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் வெடி விபத்தின் பின்னர் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |