போர்க்களமாக மாறிய கென்யா - வெடித்த மாபெரும் மக்கள் போராட்டம்
ஆபிரிக்காவின், கென்யாவில் உணவுப் பொருட்கள் மீது அரசு விதித்துள்ள வரியைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது.
நைரோபியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ரைலாஓடிங்கா அழைப்பு விடுத்திருந்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், கென்ய அதிபர் வில்லியம் ரோடோ அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக குற்றம் சாட்டினார்.
பயங்கர மோதல்
இந்நிலையில் எதிர்க்கட்சியினர் மற்றும் காவல்துறையினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தினரை விரட்டி அடித்ததால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
தொடர்ந்து பேசிய ஓடிங்கா, கென்ய அரசு எதிர்க்கட்சியினரை திட்டமிட்டு வேட்டையாடுவதாகவும் தேர்தல் ஆணையத்தை மறுசீரமைக்காமல் ஒருதலை பட்சமாக நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.