இலங்கை கடற்பரப்பில் தவம்கிடக்கும் எரிவாயு கப்பல் - தரையிறக்க முடியாமல் திண்டாட்டம்
தவம்கிடக்கும் எரிவாயு கப்பல்
இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள எரிவாயு கப்பலில் இருந்து 4 ஆவது நாளாகவும் எரிவாயுவை தரையிறக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சமையல் எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் இன்றும் அறிவித்திருந்தது.
இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள 3,900 மெற்றிக் தொன் எரிவாயு கப்பலில் இருந்து 4 ஆவது நாளாகவும் எரிவாயுவை தரையிறக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டொலர் நெருக்கடி
2.5 மில்லியன் டொலர்களை செலுத்த முடியாத காரணத்தினால் இவ்வாறு தரையிறக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டு இன்றுடன் நான்கு நாட்கள் நிறைவடைந்துள்ளன.
இதனால், பொதுமக்கள் எரிவாயு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
