யாழில் இன்று அதிகாலை வெடித்துச் சிதறிய எரிவாயு அடுப்பு! மயிரிழையில் உயிர்தப்பிய பெண் (காணொளி)
யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதால் பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வழமை போன்று இன்றைய தினம் காலையில் குறித்த பெண் உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது பாரிய சத்தத்துடன் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. இதன் போது வெடித்து சிதறிய அடுப்பின் பாகம் ஒன்று பெண்ணில் தலையில் பட்டதில் அவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும் அடுப்பு வெடித்த அதிர்வினால் சமயலையின் சீலிங் சீட்டுகளும் வெடித்துச் சிதறியுள்ளன.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ.பௌநந்தி வீட்டிலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த எரிவாயு சிலிண்டரை நேற்றைய தினமே மாற்றி இருந்ததாக விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.

