வவுனியாவில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியது!!
Srilanka
Vavuniya
explosion
Gas stove
By MKkamshan
வவுனியா கூமாங்குளத்தில் வீடு ஒன்றில் சமைத்துக்கொண்டிருந்த சமயத்தில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முதியவர் ஒருவர் ரொட்டி சுட்டுக்கொண்டிருந்த போது திடீரென்று எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இதனையடுத்து வீட்டார் எரிவாயு கொள்கலனை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தடவியல் காவல்துறையினரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



