சமையலில் ஈடுபட்டவேளை திடீரென வெடித்தது எரிவாயு அடுப்பு
amparai
explosion
gas stove
By Sumithiran
சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை திடீரென எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக குடும்பபெண் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்றையதினம் அம்பாறை-அக்கரைப்பற்று காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்வீதி அக்கரைப்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
சமையலில் ஈடுபட்டிருந்தபோது திடீரென சத்தமொன்று கேட்டதாகவும் இதன் பின்னர் குறித்த அடுப்பின் மேற்புற கண்ணாடி உடைந்து செல்வதை அவதானித்ததாகவும் சமையலில் ஈடுபட்ட பெண் தெரிவித்தார்.
மேலும் இச்சம்பவத்தால் வேறு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
