விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்
death
child
playing
By Sumithiran
தனது உறவு முறை சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி, வீட்டின் நுழைவாயில் இரும்பு கதவு வீழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குருநாகல் – தொடமிகஸ்லந்த பகுதியைச் சேர்ந்த மொஹமட் இர்ஷாட் மரியம் என்ற மூன்று வயதான சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரண்டு சிறார்களும், கேற்றின் மீதேறி விளையாட முயற்சித்த தருணத்தில், கேற் சரிந்து வீழ்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் நான்கு வயதான சிறுவன் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சிறுவன், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மதுராகொட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி