காசா மருத்துவமனைகள் செயலிழக்கும் அபாயத்தில்!
காசாவிலுள்ள மருத்துவமனைகள் இன்று(25) இரவுடன் முழுமையாக செயலிழக்கும் நிலைமை காணப்படுவதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காசாவில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தற்காலிக மோதல் தவிர்ப்பு யோசனைக்கு அமெரிக்கா மற்றும் கனடா ஆதரவு தெரிவித்துள்ளன.
மனிதாபிமான சட்ட மீறல்
இதன்மூலம் முற்றுகையிடப்பட்ட காசாவிற்குள் சிக்கியுள்ள மக்களுக்கான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காசாவில் எரிபொருள் மற்றும் மேலதிக சுகாதாரப் பொருட்கள் விநியோகம் இல்லாத பட்சத்தில் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஆபத்தை எதிர்கொள்வார்கள் என உலக சுகாதார ஸ்தாபனமும் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் காசாவில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தெளிவாக மீறப்படுவதை அனைவரும் பார்த்துக்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரெஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தும் செயற்பாடுகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், ஹமாசின் தாக்குதலுக்கு பிற தாக்கங்களும் காரணமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.