கோட்டாபயவின் கீழ் கொண்டுவரப்பட்ட 42 திணைக்களங்கள்!! வெளியான அதிவிசேட வர்த்தமானி
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Prime minister
Sri Lankan political crisis
New Gazette
By Kanna
இலங்கை டெலிகொம், முதலீட்டுச் சபை மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு உள்ளிட்ட 42 திணைக்களம், சட்டப்பூர்வ சபைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் அடங்கிய வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் உள்ள நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் 57 நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறித்த வர்த்தமானி தெரிவிக்கின்றது.
அரசு வெளியிட்ட விசேட வர்த்தமானி
