ஜனாதிபதி அநுர தொடர்பில் எதிர்க்கட்சி எம்பி பரபரப்பு தகவல்
ஜனாதிபதியின் நெருங்கிய நண்பருக்களுக்காக விசேட வர்த்தமானி அறிவித்தல் அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளதாக முஜுபுர் ரஹ்மான் பரபரப்பு கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய வர்த்தமானி
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 2025 மார்ச் மாதம் 19 ஆம் திகதியே குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.அதில் பிற்போடப்பட்ட திகதியே குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஜனவரி மாதம் 31 திகதியை குறிப்பிட்டு அன்றிலிருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட அதிகபடியான வாகனங்கள் துறைமுகத்தில் முடக்கப்பட்டது.
ஜப்பான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் verification certificate 2013 ஆம் ஆண்டு வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த இரு ஜப்பான் நிறுவனங்களால் வழங்கப்படாமையால் வாகனங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரச்சினைக்கான தீர்வு
உடனே வாகன இறக்குமதியாளர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கதைத்தன் பின்னர் Veritas என்ற நிறுவனத்தின் verification certificate அதிகாரப்பூர்வ ஆவணங்களின் சரிபார்ப்பு ஏற்றுக் கொள்வதற்காக குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அது அவ்வாயிருக்க பாவித்த வாகனங்கள் 1000 க்கு மேற்பட்டவை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கி இருக்கிறது.அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சுங்கத் திணைக்களம் மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆகிய நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் தான் இருக்கிறது.
இந்த இரு நிறுவனங்களையும் அழைத்து பாவித்த வாகனங்கள் பிரச்சினைக்கு ஏன் தீர்வு வழங்க முடியாது.
நெருங்கிய நண்பர்களுக்கு முன்னாள் ஜனாதிபதிகள் உதவி செய்வதாகவே குற்றம் சாட்டினார் அவ்வாறு என்றால் ஜனாதிபதி அநுர செய்வது அதற்கு மாறாகவா?” என்று காரசாரமாக தாக்கி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
