நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சின் விடயதானங்களை அறிவித்து வர்த்தமானி வெளியீடு
Government Of Sri Lanka
New Gazette
By Vanan
நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள சில விடயதானங்களை நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயற்படக் கூடிய விடயங்கள் மற்றும் பணிகள் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கப்படுவதாக குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, அபிவிருத்தி செயற்பாடுகள், நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பணிகள் மற்றும் செயற்பாடுகள் என்பன இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ளன.



3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்