ரணில் எடுத்த அதிரடி முடிவு - வெளியானது புதிய வர்த்தமானி
வர்த்தமானி இரத்து
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்டிருந்த அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானியை இரத்துச் செய்து புதிய வர்த்தமானி அறிவித்தலை அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று வெளியிட்டுள்ளார்.
சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி அதிபரால் விசேட வர்த்தமானி கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது.
பலரும் எதிர்ப்பு
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியை அண்மித்த பிரதேசம், உயர் நீதிமன்ற வளாகம், மேல் நீதிமன்ற வளாகம், கொழும்பு நீதவான் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களத்தை அண்மித்த பிரதேசம், அதிபர் செயலகம், அதிபர் மாளிகை கடற்படை தலைமையகம், காவல்துறை தலைமையகத்தை அண்மித்த பகுதிகள், அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டிருந்தது.
இதற்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையில், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

