சூறையாடப்படும் தமிழர் காணிகள் : அம்பலமாகும் அரசின் கோர முகம்
வடக்கு மற்றும் கிழக்கில் தற்போது பாரிய பேசுபொருளாக தமிழ் மக்களின் காணி சுவீகரிப்பு விடயம் தலைதூக்கியுள்ளது.
கடந்த மார்ச் 28 ஆம் திகதி 2430 ஆம் இலக்க வர்ததமானியொன்று அரசு தரப்பிலிருந்து வெளியிடப்படிருந்தது.
குறித்த வர்த்தமானியில், வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள காணிகளை தமிழ் மக்கள் உரிமை கோரா விட்டால் அது அரச காணிகளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு, யாழில் (Jaffna) 3669 ஏக்கர் காணியும், முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் 702 ஏக்கர் காணியும், கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் 515 ஏக்கர் காணியும் மொத்தமாக 5,940 ஏக்கர் நிலங்கள் வடக்கில் சுவீகரிப்பு செய்யப்படுவதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் சட்டத்தரணி சுமந்திரன் (M. A. Sumanthiran) விளக்கங்களை வெளியிட்டிருந்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) மற்றும் பலதரப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகள் என அவர்களது கண்டங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்தநிலையில், குறித்த வர்த்தமானியை அரசு மீளப்பெறப்படுவதை உறுதிப்படுத்தாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் எனவும் தமிழ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஒரு தனியார் தரப்பு இவ்வாறு மக்களின் காணியை அபகரிக்குமாக இருந்தால் அதனை அரசிடம் முறையிடலாம் ஆனால் இங்கு அரசாங்கமே இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதை எந்த பிரிவில் சேர்ப்பது என தெரியவில்லை.
வாக்குக்கான தேர்தல் நேரத்தில், நாங்கள் தமிழ் மக்களுக்கு அதை செய்வோம் இதை செய்வோம் என பலதரப்பட்ட உறுதிமொழியை அநுர (Anura Kumara Dissanayake) அரசாங்கம் வழங்கியது.
அத்தோடு, காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் தகுந்த பதிலை மக்களுக்கு பெற்று தருவதாகவும் மேடைகளில் அநுர வாக்குறுதி எல்லாம் வழங்கி வாக்கை சம்பாரித்து இருந்தார்.
ஆனால், அரசு போகும் போக்கை பார்த்தால் காணாமாலாக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிப்பதை தாண்டி இருக்கும் தமிழ் மக்களுக்கு வசிக்க இடமின்றி காணாமலாக்கி பார்க்கும் போல.
தனது அரசாங்கம் இதை சாதித்தது, அதை சாதித்தது என பெருமை பேசும் எந்த தேசிய மக்கள் சக்தியை சார்ந்த அரசியல் தலைமைகளும் வாய்த்திரப்பதையும் காணக்கூடியவாறு இல்லை.
பார்க்க போனால், கடந்த அரசாங்கங்களுக்கும் தற்போதைய அரசிற்கும் எந்த வேறுபாடுகளும் காணப்படுவதாக தெரியவில்லை.
தற்போது, பாரிய அதிர்வலையை கிளப்பி இருக்கும் இவ்விடயம் தொடர்பில் கதைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியில் அரசியல் தலைமைகள் இல்லை.
ஆனால், தேர்தல் முடிந்து இவ்வளவு காலம் ஆகியும் வெற்றி பெருமை பற்றி மேடை மேடையாய் கூவ குறித்த அரசியல் தலைமைகளுக்க நேரம் உள்ளது.
இந்தநிலையில், இவ்விடயம் குறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டாலும் அரசு தரப்பு வாய்த்திரக்கப்படுமா என்பது தற்போது கேள்விக்குரியாகி உள்ளதுடன் யுத்தத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் மீண்டும் வீதிக்கி இறக்கி பாரக்கும் ஆளும் வர்க்கத்தை நினைக்க வெட்கமாகவும் உள்ளது.
இவ்வாறு, இந்த காணி சுவீகரிப்பு மற்றும் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை சட்டத்தரணி செலஸ்டின் ஸ்டானிஸ்லாஸ் விளக்கியுள்ளார்.
இது தொடர்பில் அவர் பலதரப்பட்ட விரிவான கருத்துக்களை எடுத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
