சமூக வலைதளங்களில் கசிந்த வினாத்தாள்: மற்றுமொரு சந்தேகநபர் கைது
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாயப் பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் கடந்த வெள்ளிக்கிழமை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொரு ஆசிரியர்
சந்தேகநபர் முன்னர் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு சமூக வலைத்தளங்களின் ஊடாக வினாத்தாள்களை அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் பரீட்சை நிலையமொன்றில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு ஆசிரியர் முன்னதாகவே கைது செய்யப்பட்ட நிலையில் அவர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.