உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை
இந்தப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும், இலங்கை பரீட்சைகள் திணைக்களம் கடந்த மார்ச் மாதம் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம், உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த பரீட்சை நடைபெறும் திகதிகளுக்கு அமைய அடுத்துவரும் சாதாரணதர பரீட்சை உள்ளிட்ட பல பரீட்சைகளுக்கான திகதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டால், ஏனைய பரீட்சைகளுக்கான திட்டமிடல் முற்றிலும் ஒழுங்கற்றதாக மாறிவிடும் என்றும் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்