மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சாத்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டை இல்லாமை ஒரு தடையாக இருக்காது என்பதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக விசாரணை
விண்ணப்பதாரர்கள் பரீட்சை அறிவித்தலில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் அல்லது சந்தேகங்களுக்கு 1911 என்ற துரித சேவை இலக்கம் மற்றும் 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது 0112784422 என்ற தொலைநகல் (Fax) இலக்கம் ஊடாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்