பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு அதிரடி தீர்மானம்
க.பொ.த சாதாரண தரம் (சா/த) மற்றும் உயர்தர (உ/த) பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இரண்டு பிரதான பரீட்சைகளையும் நடத்துவது தொடர்பில் அடுத்தாண்டு(2024) தீர்மானிக்கப்படும் என அவர் கூறுகிறார்.
பரீட்சை அட்டவணை
பாடசாலை கல்வியை வழமைக்கு கொண்டு வந்து பரீட்சை அட்டவணையை புதுப்பித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 7,800 கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு புதிய நியமனங்களை வழங்கும் அதேவேளை. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
அதேநேரம் விஞ்ஞானம், தொழிநுட்பம், மொழி போன்ற ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடங்களுக்கு அனுமதி பெற்று வெளியேறும் 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
