சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு (G.C.E O/L Exam) தோற்றிய மாணவர்களுக்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி குறித்த மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்கான திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், அழகியல் பாட செய்முறைப் பரீட்சைகள் 2025.05.21 ஆம் திகதி தொடக்கம் 2025.05.31ஆம் திகதி வரை இடம்பெறும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்முறைப் பரீட்சைகள்
மேலும் நாடு முழுவதும் 171,100 பரீட்சார்த்திகளுக்காக 1,228 பரீட்சை நிலையங்களில் குறித்த செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி (Indika Kumari) தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 17.03.2024 முதல் 26.03.2025 வரை நடைபெற்றது.
நாடளாவிய ரீதியாக 3,663 மையங்களில் நடைபெற்ற இந்தப் பரீட்சைக்கு 474,147 மாணவர்கள் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

