க.பொ.த சாதாரண தர பரீட்சை - வெளியாகிய முக்கிய அறிவிப்பு..!
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தினத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (25.04.2023) இடம்பெற்ற போது இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சை திட்டமிட்டபடி மே மாதம் 29ஆம் திகதி நிச்சயம் இடம்பெறுமென கல்வி அமைச்சர் அமைச்சரவையில் தெரிவித்தார்.
விடைத்தாள் மதிப்பீட்டு
இதேவேளை உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இனியும் தாமதிக்கப்படாமல் விரைவில் ஆரம்பமாகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இதில் பாரிய பொறுப்புக்கள் காணப்படுகின்றன.
வெளிநாடுகளில் 20 வயதுக்குள் டிப்ளோமா கற்கையை நிறைவு செய்யக் கூடியவாறான கல்வி முறைமையே காணப்படுகிறது.
ஆனால் இலங்கையில் இதற்காக 4 ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் கற்க வேண்டியுள்ளது.
எனவே சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதும் தாமதடைந்தால் அது மாணவர்களின் எதிர்காலத்தை பாரதூரமாக பாதிக்கும்.”என தெரிவித்துள்ளார்