இலங்கையில் நடந்ததைப் போல தமிழகத்திலும் இனப்படுகொலை நடக்கிறது - சீமான் ஆவேசம்
இலங்கையில் நடந்ததைப் போல தமிழகத்திலும் இனப்படுகொலை நடக்கின்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காடுகளில் மேய்ச்சல் உரிமை கோரி தேனி மாவட்டம் போடி முந்தல் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நேற்று (03.08.2025) நடைபெற்றது.
இதன்போது, ஏராளமான நாட்டு மாடுகள் அழைத்து வரப்பட்டன. இருப்பினும் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயல்கின்றனர் என கூறி சீமானை காவல்துறை மற்றும் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இனப்படுகொலை
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் நடந்ததைப் போல தமிழகத்திலும் இனப்படுகொலை நடக்கிறது.
இலங்கையில் குண்டுகளை வீசி இனப்படுகொலை செய்தனர். ஆனால் தமிழகத்தில் மது குடிக்க வைத்து இனப்படுகொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் நடந்ததும், தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதும் ஒன்றுதான். தமிழகத்தில் மதுபான கடைகள் மூலம் தொடர்ந்து இலட்சக் கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த நாட்டை உலகத்தின் தலை சிறந்த நாடாக, பூமியின் சொர்க்கமாக மாற்றி படைப்போம். 5 ஆண்டுகளில் சிறந்த மாநிலமாக மாற்றுவேன். அவ்வளவு திட்டங்கள், சிந்தனைகள், கனவுகள் எங்களிடம் உள்ளன”என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் மாலை - திருவிழா
