இந்தியாவுக்கு ஜெர்மனி விடுத்த உத்தியோகபூர்வ அறிவிப்பு!
இந்திய கடவுச்சீட்டு உள்ளவர்களுக்கு ஜெர்மனி அரசு விசா இல்லாத போக்குவரத்து வசதியை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, இதன் மூலம் ஜெர்மனி வழியாக ஏனைய நாடுகளுக்கு பயணிக்கும் இந்தியப் பயணிகள் இனி தனியாக ஜெர்மன் விசா எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியுடன் சந்திப்பு
இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் வழியாக ஏனைய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, இனி விமான நிலைய டிரான்சிட் விசா தேவையில்லை.

விசேடமாக, அமெரிக்கா, கனடா அல்லது பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு ஜெர்மனி வழியாகச் செல்லும் இந்தியர்களுக்கு இது பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனிய ஜனாதிபதி பிரட்ரிக் மெர்ஸ் இரு நாள் பயணமாக இன்று (13.01.2026) காலை இந்தியா சென்றார்.
இதன்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திந்ததுடன் இரு நாட்டு பிரதிநிதிகள் மற்றும் மோடி, பிரட்ரிக் பங்கேற்ற உயர்மட்ட குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போதே இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |