ஜேர்மனியில் கப்பல் விபத்து: நீரில் மூழ்கியவர்களை தேடும் பணிகள் தீவிரம்
ஜேர்மனியின் வடக்கடலில் இரு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு கப்பல் நீரில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
குறித்த கப்பல் விபத்தானது இன்று(24) காலை இடம்பெற்றுள்ளது.
பிரித்தானிய சரக்குக் கப்பலான Verity, ஜேர்மனியின் Bremen என்னுமிடத்திலிருந்து, இங்கிலாந்திலுள்ள Immingham துறைமுக நகரம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்க, Polesie என்னும் பஹாமாஸ் நாட்டுக் கப்பல், ஜேர்மனியின் ஹாம்பர்கிலிருந்து, ஸ்பெயினிலுள்ள La Coruna துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தேடும் பணி
அதேவேளை, மூழ்கிய கப்பலில் இருந்தவர்கள் காணாமல் போயுள்ளதோடு அவர்களை தேடும் பணியில் ஜேர்மன் உலங்குவானூர்தி ஒன்றும் பயணிகள் கப்பல் உட்பட பல கப்பல்களும் ஈடுபட்டு வருகின்றன.
அத்தோடு, ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் நான்கு பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.