உக்ரைனுக்கு பெருத்த ஏமாற்றம்: ஜேர்மனியிடம் இருந்து வந்த செய்தி
உக்ரைனின் முக்கிய உதவியாளர்களும் நெருங்கிய நட்பு நாடான ஜேர்மனி, உக்ரைனுக்கு (Ukraine) ஏமாற்றமளிக்கும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளது.
அது என்னவென்றால், தற்போது உக்ரைனுக்கு ஜேர்மனியால் (Germany) வழங்கப்பட்டு வரும் உதவியை பாதியாக குறைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி உதவி
இதன் படி, ஜேர்மனியின் வரைவு ஒதுக்கீட்டால் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த 8 பில்லியன் யூரோ நிதி உதவி, 4 பில்லியன் யூரோக்களாக குறைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு அதிக அளவில் நிதி உதவி செய்து வந்த நாடுகளில் ஜேர்மனி இரண்டாவது நாடு என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், உக்ரைனுக்கு அமெரிக்காவால் (US) வழங்கப்பட்டு வரும் உதவிகள் நிறுத்தப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
எனினும், ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் ட்ரம்ப் நேற்றையதினம் அறிவித்திருந்தார்.
மேலும், ரஷ்யாவுக்கு (Russia) எதிராக பிரித்தானிய ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலன்ஸ்கியின் (volodymyr zelenskyy) கோரிக்கையை பிரித்தானியா (Britanya) நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |