உக்ரைன் கேட்ட ஆயுதம்: கொடுக்க தயங்கும் ஜேர்மன்
உக்ரைன் கோரிய ஆயுதத்தை ஜேர்மன் ஏன் கொடுக்க தயங்குகிறது என்பது தொடர்பில் ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்(Olaf Scholz)விளக்கமளித்துள்ளார்.
ரஷ்யாவுடன் கடந்த இரண்டு வருடங்களாக போர் புரிந்து வரும் உக்ரைன், ஜேர்மனியிடம் Taurus long-range cruise missiles என்னும் ஏவுகணையை தங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த ஏவுகணையானது, 500 கிலோமீற்றர் தூரம் பாயும் திறன்கொண்டதுடன் அதன் மூலம் உக்ரைனிலிருந்து ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த முடியும் எனவும் கூறப்படுகிறது.
ஏவுகணை
இந்நிலையில், அந்த ஏவுகணையை உக்ரைனுக்கு வழங்குவதற்கு ஜேர்மனி தயக்கம் காட்டி வருகிறது.
இது தொடர்பில் விளக்கமளித்த ஓலாஃப் ஸ்கோல்ஸ், உக்ரைனுக்கு உதவுவோம், ஆனால், அதனால் போரை அதிகரிக்கும் விருப்பமோ, அல்லது ஜேர்மனியையோ, நேட்டோ அமைப்பையோ போருக்குள் இழுக்கும் விருப்பமோ தங்களுக்கு இல்லை என்பதையும் ஜேர்மன் வீரர்களை உக்ரைனுக்கு போருக்கு அனுப்புவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |