இலங்கை தொடர்பில் ஜேர்மன் வெளியிடவுள்ள அறிவிப்பு
ஜேர்மன் வெளிவிவகார அமைச்சு இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது பிரஜைகளுக்கான பாதகமான பயண வழிகாட்டியை நீக்க முயற்சிப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நேற்று (31ஆம் திகதி) கொழும்பு சுற்றுலா சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
தவறான தகவலில் வெளியான பயண வழிகாட்டி
இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜேர்மன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் Dr. Dietmar Doeren, தவறான தகவலின் அடிப்படையில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் பயண வழிகாட்டியை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கோ அல்லது அவற்றின் விநியோகத்திற்கோ தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் கூறினார்.
9 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை
அடுத்த சில வருடங்களில் இலங்கைக்கு சுமார் 9 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்றும், அவ்வாறு நடந்தால் இலங்கை சர்வதேச நாணய நிதியம் அல்லது வெளிநாட்டு கடனாளிகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
