இலங்கைக்கு வந்து குவியும் ரஷ்ய சுற்றுலா பயணிகள்
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
By Sumithiran
இலங்கையின் பொருளாதார நிலைமையை அடுத்து குறைவடைந்த சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்த வண்ணமுள்ளது.
இதன்படி பெப்ரவரி 26 ஆம் திகதி வரை நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 100,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பெப்ரவரியில் அதிகரித்த வருகை
ஜனவரி மாதத்தில் 102,545 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். பெப்ரவரி மாதம் இந்த நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ரஷ்ய பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி, இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 21 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி