ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜேர்மனி விடுத்துள்ள அவசர கோரிக்கை !
எரிவாயு சேமிப்பு இலக்குகளை தளர்த்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தை (European Union) ஜேர்மனி (Germany) கேட்டுக்கொண்டுள்ளதாக சர்வசே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் (Ukraine) போர் காரணமாக ஏற்பட்ட விநியோகக் குறைபாடு காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நவம்பர் மாதத்திற்குள் 90% சேமிப்பு இலக்கை அடைய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், அதிக செலவு காரணமாக இந்த இலக்குகளை குறைப்பது சிறந்த தீர்வாக இருக்கும் என்று ஜேர்மனியின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் காலநிலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலைகள்
இந்த வாரம் ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் காணப்படாத அளவிற்கு அதிக உயர்வை கண்டுள்ளன.
ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் (France) உள்ளிட்ட நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்துள்ள இலக்குகள் சந்தையில் தேவையில்லாத அழுத்தத்தை உருவாக்குகின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிவாயு சேமிப்பு
ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், 2025 இற்கும் பிந்தியும் இந்த இலக்குகளை நீடிப்பதற்கான திட்டங்களை ஆய்வு செய்யும் நிலையில் உள்ளது.
குளிர்காலத்திற்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றிய எரிவாயு சேமிப்பு அளவு 50% க்கும் குறைந்துள்ள நிலையில் ரஷ்யா (Russia) வழங்கும் எரிவாயு குறைவதால் இது வேகமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், சந்தை நிலையை நியாயமான நிலையில் வைத்திருக்க எரிவாயு சேமிப்பு இலக்குகளில் அதிக நெகிழ்வுத்தன்மை கொண்டிருக்க வேண்டும் என்று ஜேர்மனி வலியுறுத்தியுள்ளடை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)