மூன்று பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் : வெளியான காணொளி
இன்றைய தினம் (15.02.2025) விடுதலை செய்யப்படும் மூன்று பிணைக்கைதிகள் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டிருந்தது.
இஸ்ரேல் (Israel) மற்றும் காசாவின் (Gaza) ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250 இற்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்செல்லப்பட்டனர்.
அதன்பின்னர். தற்காலிக போர் நிறுத்தத்த நடைமுறையின் போது 120 இற்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ள நிலையில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பிணைக்கைதிகளில் மூன்று ஆண்களை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் யாஹர் ஹரன் (46), அலெக்சாண்டர் ருபெனோ (29) மற்றும் சஹொய் டிகெல் ஷென் (36) ஆகிய மூன்று பேரே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)