ஜேர்மனியில் பணிபுரிவோருக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைக்கபட்டது வேலை நாட்கள்
ஜேர்மனி பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்காக புதிய தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
அதன்படி, நாளை முதல், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு ஜேர்மனி அரசு தீர்மானித்துள்ளது.
அதேவேளை, குறித்த தீர்மானத்தின் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்மென ஜேர்மனி அரசு எதிர்பார்த்துள்ளது.
கோரிக்கை
அத்துடன், இந்த திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு அந்நாட்டில் உள்ள பல தொழிலாளர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளளன.
இந்நிலையில், ஜேர்மனியின் 45 நிறுவனங்களில் இந்த திட்டம் நடைமுறைபடுத்துப்படவுள்ளதோடு அடுத்த 6 மாதங்களுக்கு இது மேற்கொள்ளப்படவிருக்கிறது.
அபிவிருத்தியடைந்த நாடுகள்
மேலும் இதன் மூலம், அந்நாட்டில் காணப்படும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வருமேனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |