இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்
அம்பாறை மாவட்டம் மருதமுனை - கல்முனை இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று (22.12.2025) மதியம் உயிரிழந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர்.
இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார் 3 அடி நீளமும் 25 தொடக்கம் 50 கிலோ கிராம் எடை கொண்டதாகும்.
காலநிலை மாற்றம்
காலநிலை காரணமாக ஆழ்கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கி வருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து ஆமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இம்மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அண்மையில் கடலாமைகள் டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியமை சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - பாறுக் ஷிஹான்


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |